கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வியாழன், 27 ஜனவரி, 2011

பிரம்மாவின் வயது



     உலகம் தோன்றியதிலிருந்தே ஏதோ ஒரு கணக்குடன் தான் அது இயங்கி கொண்டிருக்கிறது. அந்த அடிப்படை கணக்கு தான் பங்சாங்கம். அதுதான் முதலில் பிரம்மாவிற்கு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே பிரம்மன் தன் படைத்தல் தொழிலை மேற்கொண்டுள்ளான். காலங்கள் எல்லாமே மிக அழகாக பிரிக்கப்பட்டுள்ளது. 60 நாழிகை ஒரு நாள். 15 நாட்கள் ஒரு பட்சம். இரண்டு பட்சம் ஒரு மாதம். 6 மாதங்கள் ஒரு அயனம். இரண்டு அயனங்கள் ஒரு வருடம். இது தான் மனிதனுக்கான காலஅளவுகோல்.

     இதேபோன்று தேவர்களுக்கென்று பார்க்கும்போது 1 மனித வருடம் 1 ஒரு தெய்வீக நாளாகக் கொள்ளப்படும். 360 தெய்வீக நாட்கள் சேர்ந்தது ஒரு தெய்வீக ஆண்டாகும். இதுபோன்று 12,000 தெய்வீக ஆண்டுகள் சேர்ந்தது தான் ஒரு சதுர் யுகமாகும்.


1
மனுஷ வருஷம்
1 தெய்வீக நாள்
360
தெய்வீக நாள்
1 தெய்வீக ஆண்டு
12000
தெய்வீக ஆண்டுகள்
1 சதுர் யுகம்



     ஒரு சதுர் யுகமென்பது நான்கு யுகங்களின் சேர்க்கையாகும். அதாவது கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் இந்த நான்கும் சேர்ந்ததே சதுர் யுகமாகும்.

கிருத யுகம் 4800 தெய்வீக ஆண்டுகள் 17,28,000 மனித ஆண்டுகள்
திரேதா யுகம் 3600 தெய்வீக ஆண்டுகள் 12,96,000 மனித ஆண்டுகள்
துவாபர யுகம் 2400 தெய்வீக ஆண்டுகள்   8,64,000 மனித ஆண்டுகள்
கலி யுகம் 1200 தெய்வீக ஆண்டுகள்   4,32,000 மனித ஆண்டுகள்
சதுர் யுகம் 12000 தெய்வீக ஆண்டுகள் 43,20,000 மனித ஆண்டுகள்


     71 சதுர் யுகங்களின் முடிவு ஒரு மநுவந்தரமாகும். அதாவது 14 மநுவந்தரங்கள் சேர்ந்தது ஒரு கல்பம். அதாவது 14 X 71=994 சதுர் யுகங்கள். மிச்சம் 6 சதுர் யுகங்கள், மொத்தம் 1000 சதுர்யுகங்கள் சேர்ந்தது தான் ஒரு கல்பம். அதாவது 432 கோடி மனித ஆண்டுகள் முடிந்தால், அது தான் ஒரு கல்பம். அதுதான் பிரம்மாவிற்கு ஒரு பகல். ஆக இரண்டு கல்பம் சேர்ந்ததே பிரம்மாவிற்கு ஒரு நாள். அதாவது 864 கோடி மனித ஆண்டுகள்.

71 சதுர் யுகம்1 மநுவந்தரம்                  8,52,000 தெய்வீக ஆண்டுகள்
14 மநுவந்தரம்1 கல்பம்         429,40,80,000 மனித ஆண்டுகள்
மிச்சம் 6 சதுர் யுகம்             2,59,20,000 மனித ஆண்டுகள்
1000 சதுர் யுகம்1 கல்பம்         432,00,00,000 மனித ஆண்டுகள்
2 கல்பம்1 பிரம்ம நாள்         864,00,00,000 மனித ஆண்டுகள்
360 பிரம்ம நாள்1 பிரம்ம ஆண்டு 3,11,040,00,00,000 மனித ஆண்டுகள்


     இந்த கணக்கினைப் பார்த்தால் நமக்கு நிச்சயம் மூச்சு முட்டும். இன்றைய மனிதன் சராசரியாக 60 முதல் 80 ஆண்டுகள் தான் உயிர் வாழ்கிறான். இதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பிரம்மா தன் ஒரு வயதினை அடைவதற்குள் நமெல்லாம் எத்தனை முறை பிரம்மானால் இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்போம் என்பதை உட்கார்ந்து தான் எண்ணணும். உலக நிகழ்வுகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் நடப்பவையே. கால சுழற்சியே. உதாரணமாக இராமன் பிறந்தது திரேதா யுகத்தில் தான். பிரம்மாவின் ஒரு வயதிற்குள் இராமன் மட்டுமே ஆயிரம் தடவை பிறந்திருப்பான். நீங்களும் நானும் அப்படியானால் எத்தனை தடவை பிறந்திருப்போம்? இந்த பிறவிப் பெருங்கடலில் எத்தனைப் பிறவிகளாய் நீந்திக் கொண்டிருக்கிறோமென்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள். இந்த பதிவினை நானும் எத்தனை தடவை எழுதியிருப்பேனோ? நீங்களும் எத்தனை தடவை இதைப் படித்து கொண்டிருப்பீர்களோ? என்பது அந்த பிரம்மனுக்கே வெளிச்சம்?

நன்றி: விக்கிபீடியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.