கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

திங்கள், 14 மார்ச், 2011

நண்பேன்டா...வில்லேன்டா...சமம்டா...!


நண்பேன்டா...



கிரகங்களில் யார் யார் ஆர்யா, சந்தானம் மாதிரி நண்பர்கள் என்று பார்க்கலாம். "பாஸ் என்கிற பாஸ்கரனில்" எப்படி ஆர்யா, சந்தானம் நண்பர்கள் கூட்டணி ஒரு சலிப்பும் தட்டாமல் அந்த படம் முழுவதும் நமக்கு ஒரு சந்தோஷமான நகைச்சுவை உணர்வை வாரி வழங்கியதோ அது போலத் தான் கிரகங்களில் நட்பு கூட்டணி ரொம்ப முக்கியமாகும். நட்பு கிரகங்கள் ஒன்றாக ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருப்பது என்பது ஒரு யோகமான அமைப்பே ஆகும். உதாரணமாக சூரியனுக்கு குரு, செவ்வாய், சந்திரன் இந்த மூன்றும் நட்பு கிரகங்கள். இவற்றில் சூரியன் யாருடன் கூடினாலும் மிக நட்பாக இருக்கும். அதுபோல மற்ற கிரகங்களுக்கான நட்பு உறவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிரகங்களின் நட்பு

சூரியன் - குரு, செவ்வாய், சந்திரன்

சந்திரன் - சூரியன், புதன்

செவ்வாய் - குரு, சூரியன், சந்திரன்

புதன் - சுக்கிரன், சூரியன், ராகு, கேது

குரு - சூரியன், செவ்வாய், சந்திரன்

சுக்கிரன் - புதன், சனி, ராகு, கேது

சனி - சுக்கிரன், புதன், ராகு, கேது


வில்லேன்டா...



கிரகங்களில் யார் யார் நம்பியார், எம்.ஜி.ஆர் மாதிரி எதிரிகள் என்று பார்க்கலாம். நம்பியாரும் எம்.ஜி.ஆரும் படங்களில் எந்த அளவிற்கு மோதிக் கொள்வார்கள் என்று எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்த நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோலத் தான் பகைமை கொண்ட கிரகங்கள் ஒன்றாக கூடி ஒரே வீட்டில் இருந்தால் எந்த அளவிற்கு அந்த கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு கெட்டப் பலன்களைச் செய்யும் என்பதை சற்றே யூகித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக சூரியனுக்கு பகை என்று பார்த்தால் அது சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவை ஆகும். சூரியன் இவற்றுடன் சேரும்போது கெடுபலன்களை செய்வதற்கு நம்பியார் போல் செயல்படும். எந்தெந்த கிரகங்கள் பகை உறவு கொண்டுள்ளன என்பது பின்வருமாறு.

கிரகங்களின் பகை


சூரியன் - சுக்கிரன், சனி, ராகு, கேது

சந்திரன் - ராகு, கேது

செவ்வாய் -  புதன்

புதன் - சந்திரன்

குரு - சுக்கிரன், புதன், ராகு, கேது

சுக்கிரன் - சூரியன், சந்திரன்

சனி - செவ்வாய், சூரியன், சந்திரன்


சமம்டா...



கிரகங்களில் யார் யார் ரஜினி, கமல் மாதிரி சமமானவர்கள் என்று பார்க்கலாம். ரஜினியோட படங்கள் எந்த அளவிற்கு பிரபலமோ அதற்கு நிகராக கமலின் படங்களும் பிரபலம் தான். அதாவது இருவருக்கும் உள்ள ஆற்றல்கள், திறமைகள் வெவ்வேறாக இருந்தாலும், இருவருமே அவரவருடைய தனிப்பட்ட வழிகளில் சரி சமமானவர்களே. அந்த வகையில் வெவ்வேறு ஆற்றல்களைப் பெற்ற கிரகங்கள் எப்படி சம பலத்தினைப் பெறுகின்றன என்பது கீழே தரப்பட்டுள்ளது. உதாரணமாக சூரியனுக்கு புதன் நிகரானவன் ஆவான்.

கிரகங்களின் சமம்


சூரியன் - புதன்

சந்திரன் - குரு, சுக்கிரன், செவ்வாய், சனி

செவ்வாய் - சனி, சுக்கிரன், ராகு, கேது

புதன் - குரு, செவ்வாய், சனி

குரு - சனி

சுக்கிரன் - குரு, செவ்வாய்

சனி - குரு

ஜோதிடம் கற்றவர்களும், ஜோதிடம் கற்பவர்களும் முக்கியமாக தெரிஞ்சிருக்க வேண்டியது இந்த கிரகங்களுககான நட்பு, பகை, சமம் உறவு முறையாகும். இது மிக முக்கியமான அடிப்படையான விஷயமாகும். ஆனால் இந்த உறவு முறைகளில் கூட சில ஜோதிடர்கள் தவறாக சொல்வதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். சரி எல்லோருக்கும் உபயோகமாக இருக்கட்டுமே என்று தோனிற்று. அதனால் தான் இந்த பதிவு.

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.


அடுத்தது..... கிரகங்களின் நட்பு வீடுகள்...

3 கருத்துகள்:

Murari சொன்னது…

உங்களின் பாடங்கள் பிரமாதம். குறிப்பாக சமம் என்பதற்கு கமல்,ரஜனி அற்புதம்.நீங்கள் தந்த விபரங்கள் எல்லோராலும் அறிந்ததே.ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் பல நாளாக உண்டு.

சூரியனுக்கு சுக்கிரன் நட்பு. ஆனால் சுக்கிரனுக்கு சூரியன் பகை. A என்பவர் B என்பவரை நட்போடு அணுக B, Aயோடு பகைக்கின்றார்.

கேள்வி என்னவென்றால் சூரி, சுக் இருவரும் ஒரு ராசியில் சேர்க்கை பெற்றால் நிலைமை என்ன? விளக்கம் வேண்டுகின்றேன்.

ஜோதிடப் பூக்கள்! சொன்னது…

நன்றி முராரி. சூரியனுக்கு சுக்கிரனும், சுக்கிரனுக்கு சூரியனும் ரெண்டுமே பகைக் கிரகங்கள் தான். பதிவினை மீண்டும் படிக்கவும்.

உங்களின் சந்தேகத்திற்கு உதாரணமாக சந்திரன், புதனை எடுத்துக் கொள்வோம். சந்திரனுக்கு புதன் நட்பாகும். ஆனால் புதனுக்கு சந்திரன் பகையாகும். புதன் சந்திரனுக்கு தவறான வழியில் பிறந்த மகனாவான். எனவே தன் இழிந்த நிலைக்கு காரணமான தந்தையை எதிர்த்தும், அதே நேரத்தில் தவறான வழியில் பிறந்தாலும் புதன் தன் மகனே என்று சந்திரன் தந்தை ஸ்தானத்தில் நட்பாக அணுகுவார்.

இந்நிலையில் கூட்டுபலனே ஏற்படும். இது போலத் தான் மற்ற கிரகங்களின் சேர்க்கைக்கும் அவர்களுக்குள்ளான உறவு முறைகளை அறிந்து பிரித்துப் பலன் அறிய வேண்டும்.

Murari சொன்னது…

பதிலுக்கு நன்றி.என் கேள்வியின் தரவுகள் தவறியும் கேள்வியின் உள்ளார்த்தத்தைப் புரிந்து பதில் சொன்ன உங்களுக்கு மேலும் நன்றிகள்.

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.