கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம்.
இந்த யோகத்தை சுலபமாக சொல்லணும்னா எம். ஜி. ஆர். படத்தில வருகிற புகழ் பெற்ற வசனம் தான் எனக்கு உடனே ஞாபகத்திற்கு வருகிறது.
ஆம், இந்த வசனத்தின் பொருள் தான் இந்த யோகத்தின் பலனும் கூட. அதாவது ஒரு மதம் கொண்ட யானை எவ்வளவு துன்பத்தை கொடுக்க கூடியது என்பதை நாம் நன்றாக அறிவோம். அந்த மதம் கொண்ட யானையே ஒரு சினம் கொண்ட சிங்கத்தை கண்டால் தெரித்து ஓடி விடும் என்பது தான் இதன் பொருள். அதுபோலத் தான் இந்த கஜகேசரி யோகம் மட்டும் ஒரு ஜாதகத்திலிருந்து விட்டால் அது எவ்வளவு துன்பத்தை விளைவிக்க கூடிய மதம் கொண்ட யானை போன்ற கெட்ட யோகங்கள் இருந்தாலும் கூட அவற்றை விரட்டியடித்து நற்பலன்களை அந்த ஜாதகருக்கு வாரி வழங்கும் என்பதே உண்மை.
ஒரு ஜனன ஜாதகத்தில் சந்திரனுக்கு 1, 4, 7, 10 இடங்களாகிய ஆகிய கேந்திர ஸ்தானங்களில் குரு நிற்க, குருவின் கேந்திரத்தில் சந்திரன் நின்றால், நின்ற அந்த 1,4,7,10 இடங்கள் சந்திரனுக்கும், குருவுக்கும் நன்மை பயக்குமிடங்களாயின் அது கஜகேசரி யோகமாகும்.
ஜோதிடப் பாடல்
வருசசி கேந்தி ரத்தில்
மன்னவன் நிற்க
அரசன்தன் கேந்தி ரத்தில்
அம்புலிதானும் நிற்க
விரவுமற் றிடத்தின் மற்றோர்
மேவிய தோஷம் யானை
உறுசிங்கம் கண்டவாறாம்
ஓது கேசரி யோகம்
மற்றொரு பாடல்
"இந்திருக்கும் லக்கினகேந் திரத்தில் பொன்
இருங்கசகே சரியோகம்"
பொதுவாக இந்த யோகம் ஜோதிடத்தில் மிக உயர்ந்ததாக சொல்லப் பட்டிருக்கிறது. இந்த கஜகேசரி யோகமுள்ள ஒரு ஜாதகர் ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டால் அந்த குடும்பம் எப்படிப்பட்ட தரித்திர சூழ்நிலையிலிருந்தாலும் அந்த குடும்பத்தை மீட்டு கொண்டு வரும் ஆற்றல் இந்த யோகத்தில் பிறந்த அந்த ஜாதகருக்கு நிச்சயமிருக்கும்.
பூக்கள் மலரும்.....
**********************************************************************************
6 கருத்துகள்:
அறியாத பல இன்று அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் மீண்டும் வருவேன்
நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
பதிவுலகில் பிரபலமான உங்களின் வருகை எனக்கு என்றும் நினைவில் இருக்கும் நண்பா!!
தங்களின் வலைமனை மிகவும் அருமை!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
Word verification நீக்கப்பட்டு விட்டது. தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி..
write a lot sir its a divine service
நண்பரே ஜாதகத்தில் லக்கணத்திர்க்கு 12 கேது இருந்தால் முக்தி என்கிறார்களே அது உண்மையா அதை பற்றி கூறுங்கள் .
கருத்துரையிடுக
பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.