கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

புதன், 19 ஜனவரி, 2011

அனுபவ பூக்கள்-1

வெறும் ஜோதிடக்கட்டுரைகள் மட்டும் எழுதினா ரொம்ப போரடிக்கும்ன்னு பதிவன்பர் முருகேசன் சொன்ன கருத்தையேற்று என்னுடைய சில அனுபவங்களையும் சேர்த்து எழுதணும்ன்னு நினைச்சப்ப உதயமானது தான் இந்த அனுபவ பூக்கள். இதிலே பெரும்பாலும் ஜோதிடம் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதிலே எனக்கு ஒரு வசதி இருக்கிறது எப்படி வேண்டுமானாலும் பதிவை சுருக்கி / மாற்றி எழுதிக் கொள்ளலாம்.

ஜோதிடம் கத்துக்கணும்ன்னு நிறைய பேருக்கு ஆசை இருக்கு. ஏன் கத்துகணும்கிறதுக்கு ஒரு ஒருத்தர் ஒரு ஒரு காரணத்தை சொல்லறதை நாம கேட்கலாம். ஜோதிடத்தில நாட்டம் வரம்னுனா அது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வயதும், பக்குவமும், முதிர்ச்சியும் வந்த பிறகே கத்துகிறாங்கன்னு சொல்லலாம். அது உண்மையும் கூட. அதையும் தாண்டி ஒரு சிலருக்கே இளம் வயதிலேயே ஜோதிட அறிவும், ஞானமும் கிடைச்சிருக்கு. உண்மையிலேயே அவங்க கடவுளோடோ அனுக்கிரகம் பெற்றவங்க தாங்க.
என் நண்பர்கள சில பேருக்கு ஜோதிடம் கத்துகிடணும் ஆசையா எங்கிட்ட கேட்டாங்க. நான் நீ ஏன் கத்துக்கணும் ஆசை படறன்னு கேட்டேன். அதுக்கு நீங்க ஜோதிடம் சொல்றப்ப அடிக்கடி என் கைய புடிச்சி பார்த்து சொல்றீங்க. அது எனக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னார். அது எல்லா ஜோதிடரும் பண்றதுதானேன்னு சொன்னேன். அதாங்க நானும் ஜோதிடம் கத்துகிட்டா நானும் எனக்கு தெரிஞ்ச பொண்ணுங்களோட கையை தொட்டு பிடிச்சி பார்த்துக்கலாம்ல்ல அது எனக்கு ஒரு வசதி தானங்கன்னு சொன்னாரு. இப்ப நானா போயி ஒரு பொண்ணோட கையை புடிச்சா நான் அடிவாங்கிறதுதான் மிச்சம் அதே சமயம் எனக்கு ஜோசியம் சொல்ல தெரிஞ்சிருந்தா எல்லாரும் எங்க என் கைய கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்னு அவங்களே அவங்க கைய கொடுப்பாங்கல்லே,, நீங்க வேஸ்ட்ங்கன்னு சொன்னாரு.

வேறு ஒரு நண்பர் ஒருத்தர் அவருக்கும் ஜோதிடம் கத்துக்கணும் ரொம்ப ஆசை. அவரு அடிக்கடி எங்கிட்ட கேட்பதுண்டு எப்படிப்பா நீ இந்த ஜோதிடத்தை கத்துகிட்ட? உங்க வீட்டில யார் யாரெல்லாம் ஜோதிடம் பார்ப்பாங்க? உங்க அப்பா ஜோதிடரா? உங்க தாத்தா ஜோதிடரா? அதுக்கு நான், எங்க குடும்பத்துல எனக்கு தெரிஞ்ச வரைக்கும் யாரும் இந்த தொழில்ல இல்ல. இது நானா என்னுடைய சொந்த முயற்சியாலும் கடவுளோட அனுக்கிரகத்ததாலும் நானே கத்துகிட்டது தான் யாரும் எனக்கு சொல்லி தரல. அது எப்படிப்பா முடியும்ன்னு கேட்டாரு. நான் சொன்னேன் முடியும் சார் அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேடல்கள் உண்டு.  நம்ம விஜய் பாட்டுல வருமே "தேடல் இல்லா வாழ்க்கை முடிந்து விடும்". அதுபோல தான் நாம எதை தேடறமோ அது நிச்சயமா நமக்கு கிடைக்கும். இது தான் உலகம். நீங்க பணத்தை தேடினா அது உங்களுக்கு கிடைக்கும். அதுபோல அறிவை தேடினாலும் அது கிடைக்குமுன்னு சொன்னேன்.

போனப் பதிவில் செவ்வாய் தோஷத்தை பற்றி எழுதி இருந்தேன். அதுல்ல பரிகாரத்தைப் பற்றி சொல்லிருந்தேன். நான் பார்த்த சில கடுமையான செவ்வாய் தோஷ ஜாதகர்களுக்கு நான் ஒரு சில பரிகாரகங்களை செய்ய சொல்லியிருந்தேன். எனக்கு தெரிந்த உறவினர் ஒருவர் 35 வயதிற்கு மேல் ஆகிறது. அவருக்கு கடுமையான செவ்வாய் தோஷம் தான். உண்மையிலேயே அவருடைய 7மிட நீச்ச செவ்வாயினால் தான் அவருக்கு இத்தனை வயதாகியும் கூட அவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறார்.  அவருக்கு இந்த ஜோதிடத்தில்லாம் நம்பிக்கை கிடையாது. அவர் நேரடியாக என்னிடம் ஜோதிடப் பலனும் கேட்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்த நண்பர் தான் இன்னும் அவருக்கு கல்யாணம் ஆக வில்லையே என்று அவர் சார்பாக பலன் கேட்டார். நான் சொன்ன பலன்களை அப்படியே என் நண்பர் தன் உறவினரிடம் சொல்லி அப்படியே பரிகாரகங்களையும் செய்ய சொன்னார்.  அவரும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போயிட்டு வந்தார். வந்துட்டு, அவரோ ஜோதிடமெல்லாம் சும்மா பொய் இப்ப பாருங்க நான் அந்த கோவிலுக்கு போயிட்டு வந்துட்டேன் இன்னும் ஒன்னும் நடக்கலன்னு சொல்றாரு. அதன்பிறகு அந்த நண்பர் என்னை தொடர்பு கொண்டு இந்த மாதிரி சொல்றாருன்னு சொன்னாரு. அப்புறம் நான் விசாரித்ததில் அந்த உறவினர் எப்படி சாமி கும்பிட்டுவிட்டு வந்திருக்கிறாருன்னு பாருங்க. அந்த உறவினரோ பெரிதாக நம்பிக்கையில்லாமல் அரைகுறை மனதோடு பரிகாரம் செய்ய வைத்தீஸ்வரன் கோவிலுக்கு புறப்பட்டார். அங்கு சென்ற அந்த நேரம் கோவில் திருவிழாவிற்காக கோவிலை சுத்தப்படுத்தி கொண்டிருந்தனர். அதனால் அந்த கோவில் தீர்த்தமெல்லாம் கலங்கிய நிலையிலிருந்ததால் அந்த தீர்த்தத்தில் எப்படி குளிப்பது என்று வெறுமனே தலையில் தீர்த்தத்தை தெளித்து விட்டு
சும்மா சாமி கும்பிட்டுவிட்டு வந்திருக்கிறார்.


இப்படி செய்து விட்டு வந்த பிறகு பலன் மட்டும் கிடைக்க வேண்டுமென நினைப்பது எத்தனை தவறான ஒன்று. பரிகாரம் என்பதே செய்த பாவ கர்ம வினைகளை தொலைப்பதற்காக தான் செய்கிறோம். அங்கும் வந்து கடவுளை நம்பாமல், மதியாமல் , ஒரு பக்தி சிரத்தையுமில்லாமல் வணங்கினால் எப்படி பலன் கிடைக்கும்? பிறகு நான் சொன்னேன் முதலில் அவருக்காக நீங்கள் பலன் கேட்டதே தவறு. அதையும் தாண்டி வணங்கிய விதம் பற்றி நீங்களே சொல்லிவிட்டீர்கள் இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. கடவுளை முழுமையாக நம்பி பிறகு வணங்கினால் மட்டுமே கடவுள் நம் பாவங்களை மன்னித்து நமக்கு இந்த ஜென்மத்தில் ஒரு வாய்ப்பு அளித்து ஒரு நல்ல வாழ்க்கையும் அளிப்பார். அய்யா நீங்கள் ஒருவரிடம் ஒரு சகாயத்தை வேண்டி செல்லுகின்றீர்களென்று வைத்து கொள்வோம். அவரை மதிக்காமல் அவரிடமிருந்து நீங்கள் கண்டிப்பாக அந்த சகாயத்தைப் பெற்றுவிட முடியுமா? சாதாரண மனிதரிடமிருந்தே சகாயம் பெறுவதற்கு நாம் எத்தனை மரியாதை முறைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருக்க கடவுளை நாம் உரிய முறையில் வழிபட்டு வேண்டிய சாகாயத்தை அடைவதில் என்ன தவறிருக்க முடியும். அந்த வழிமுறைகளை விருப்பத்துடன் செய்யாமல் பலன் மட்டும் வேண்டுமென்பது எப்படியிருக்கிறது தெரியுமா நான் உழைக்க மாட்டேன் ஆனால் எனக்கு கூலி மட்டும் வேண்டுமென்பது போல உள்ளது. நான் கண்டிப்பாக அந்த உறவினரை குறை கூற மாட்டேன். ஏனெனில் அது அவருடைய அறியாமையால் விளைந்த ஒன்றே அன்றி வேறொன்றும் கிடையாது. நாம் பெற்றப்பிள்ளைகள் நம்மை மதிக்க வேண்டுமென்கிற மனப்பான்மை எல்லாருக்குமிருப்பதை போலத் தான் நம்மை படைத்த கடவுளுக்கும் நாம் அவரை வணங்க வேண்டுமென்கிற விருப்பமிருப்பதில் ஒரு நியாயமிருக்கத் தான் செய்கிறது.

இதே மாதிரி நான் ஜாதகம் பார்த்த ஒருவருடைய ஜாதகத்தில் 7மிட செவ்வாய் நீச்சமடைந்து பலமிழந்து இருந்தது. ஆனால் ஜாதகம் பார்க்க வந்தவரோ என்னுடைய நெருங்கிய நண்பர். ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு ஜாதகம் பார்ப்பதுன்னாலே எனக்குள்ளே பெரிய தயக்கம் வந்துவிடும். ஏன்னா நான் ரொம்ப நேர்மையா இருக்கறத இருக்க மாதிரி அப்படியே சொல்லி விடுவேன். ஆனால் ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு பார்க்கும் போது அப்படி சொல்ல முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலையில அடிக்கடி நான் மாட்டிகிடறதுண்டு. அப்பெல்லாம் நான் என்னையும் அறியாமல் உண்மையை மாத்தி சொல்லி தான் இருக்கிறேன். அது ஏன்னு எனக்கே இன்னைக்கு வரைக்கும் தெரியல. என் நெருங்கிய நண்பர்களுக்கு என்னை அறியாமலே உண்மையை மறைத்து பல தடவை சொல்லியிருக்கிறேன். அப்படிதான் இந்த ஜாதகருக்கும் நான் சொல்லிட்டேன். அதாவது என்னன்னா இந்த ஜாதகருக்கு 7ல செவ்வாய் நீச்சமடைந்துமிருக்கிறதோடுலில்லாம சனி பகவானும் சேர்ந்து இருக்கிறார். என் நண்பரோ அந்த பையனுக்கு கட்டபோற அந்த பெண்ணோட ஜாதகத்ததையும் காட்டி கல்யாணம் பேசிமுடிச்சாச்சு நிச்சயம் பண்ணப் போறோம்ன்னு சொன்னாரு. நானும் அந்த ஜாதகத்தை வாங்கிப் பார்த்துட்டு இது ரெண்டும் சேராதுன்னு நன்றாக தெரிந்திருந்தும் சரி கல்யாணம் பண்ணலாம்ன்னு சொல்லிட்டேன்.ஆனால் மனசு உறுத்திக்கிட்டேயிருந்தது. கொஞ்ச நாள் போனதும் என் நண்பர் என்னிடம் கொஞ்சம் தயங்கி சொன்னார். நிச்சயதார்த்தம் நின்னு போச்சுன்னு. அய்யோ நல்லா தெரிஞ்சிருந்தும் நாம இப்படி பொய் சொல்லிட்டோமே என்று நான் எனக்குள்ளே நினைத்து கொண்டு பரவாயில்லை விடுங்க  வேற நல்ல வரன் வரும் அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா காத்துகிட்டுயிருங்கன்னு சொன்னேன். அப்போது இன்னொரு தடவை அந்த ஜாதகத்தை நான் பார்த்த போது அந்த ஜாதகர் படப்போற அவஸ்தைகள் எல்லாம் என் கண்முன்னே சற்று வந்து போனது. ஆனால் இந்த தடவையும் அவருகிட்ட அந்த உண்மையை சொல்ல முடியல. அதே மாதிரி கொஞ்ச நாள் போனதும் என் நண்பர் என் கிட்ட சொன்னாரு இந்த தடவை அந்த ஜாதகர் ஒரு பெண்ணை காதலிப்பதையும் அதனால எழுந்துள்ள பிரச்சனைகளைப் பற்றியும் சொன்னாரு. அதுவும் நான் எதிர்பார்த்ததைப் போலவே இருந்ததது. சரி இந்த பெண்ணையாவது கல்யாணம் பண்ணாலாமான்னு கேட்டாரு.இந்த கல்யாணமும் நடக்காதுன்னு தெரிந்திருந்தும் முயற்சி பண்ணி பாருங்கன்னு சொன்னேன். திரும்பி கொஞ்ச நாள் பொறுத்து என் நண்பர் சொன்னாரு அந்த காதலும் முறிந்து போச்சுன்னு. இப்ப எப்பதான் கல்யாணம் நடக்கும்ன்னு கேட்கிறார். இப்பவும் எனக்கு உண்மையை சொல்ல தயக்கமா தான் இருக்கு. அதை ஏன் இங்க சொல்றேன்னா செவ்வாய் தோஷம் ரொம்ப கடுமையா இருந்தா ரொம்ப பிரச்சினைதாங்க. இவருக்கும் என் நண்பரிடம் இந்த தோஷப் பரிகாரங்களை செய்ய சொன்னேன். ஆனால் அந்த ஜாதகருக்கோ இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை அவரு அதேல்லாம் பண்ண மாடடாருன்னு சொன்னாரு. அப்ப ரொம்ப கஷ்டம்ன்னு சொன்னேன். இந்த மாதிரி இருந்தா எப்படிதான் பாபவிமோசனம் கிடைக்கும்.

பூக்கள் மலரும்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.