கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

புதன், 5 ஜனவரி, 2011

கன்னிப் பதிவு


"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே."


பிள்ளையார் அப்பனை வணங்காமல் எந்த ஒரு காரியமும் நான் பொதுவாக தொடங்குவதில்லை. பிள்ளையாரைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்களுன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு அவருடைய யானை முகம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே பிடிக்கும். பொதுவாக யானையை நாம கோவில்லப் பார்த்தாலே நம்மை அறியாமல் நமக்குள்ளே ஒரு சந்தோஷம் ஏற்படுவதை நன்கு உணர முடியும். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் அடையாளமாக யானையின் முகம் பிரதிபலிப்பதை யாரும் மறுக்க முடியாது.

இன்றைக்கு வலைப்  பூக்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்து விட்டது. தினமும் ஒரு வலை பதிவர் வந்து கொண்டே இருக்க தான் செய்கின்றனர். இதோ அந்த வரிசையில் நானும் ஒரு உதயம். இதோ இன்னொருத்தன் எழுத வந்துட்டான்யா... இது தான் எல்லோரும் சொல்ல போற கமெண்ட்ஸ். எப்படி இருந்தா என்ன? இன்றைக்கு கோடிகணக்கில் மக்கள் தொகை இருக்கு. ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பிறந்துகிட்டு தான் இருக்கு. இருந்தாலும் தனக்குன்னு முதல் குழந்தை பிறக்கும் போது ஏற்படுகிற அந்த எதிர்பார்ப்பும் சந்தோஷமும் ஒரு தனி சுகம் தான். அந்த வகையான ஒரு தனி சுகம் தான் எனக்கும். மற்றவர்களின் பார்வைக்கு இது உலகத்துக்கு இன்னொரு குழந்தை, ஆனால் எனக்கு இது முதல் குழந்தை.  இந்த வலைப் பதிவின் நோக்கமே ஜோதிட சம்பந்தமான எல்லா தேடல்களுக்கும் முடிந்த அளவு விடை காணும் ஒரு முயற்சி.

இந்த கன்னிப் பதிவு பதியும் இந்த நாள் ஒரு நல்ல புதன் கிழமை ஆகும். ஜோதிடத்திற்கும் புதனுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. ஆம் ஒரு ஜனன ஜாதகத்தில் புதனின் வலிமையைப் பொருத்தே ஒருவருக்கு ஜோதிட அறிவு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கூற முடியும். இனி வரும் பதிவுகளில் நாம் ஜோதிட சம்பந்தமான நிறைய விஷயங்களைப் பற்றி அலசுவோம்.

பூக்கள் மலரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.