நிறைய பேருக்கு அவ்வப்பொழுது சிறிய மற்றும் பெரிய சந்தேகங்கள் வந்து கொண்டேயிருக்கும். பிறகு என்ன செய்வதென்று புரியாமலும், முடிவெடுக்க முடியாமலும் ஒரு தவிப்பு ஏற்படும். யார் கிட்ட கேட்டா நல்லாயிருக்கும் என்ற ஒரு பெரிய தேடலே இருக்கும். அந்த மாதிரியான சூழ்நிலையில் உங்களுக்கு ஏற்படும் எந்த மாதிரியான ஜோதிட ரீதியான சந்தேகங்களையும் நீங்கள் என்னிடம் நேரடியாக கேட்கலாம்.
ஜோதிட சம்பந்தமான கேள்விகளை நீங்கள் பிரத்யேகமான முறையில் கேட்க வேண்டுமென்றால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுடைய கேள்வியுடன், உங்களுடைய பெயர்(விருப்பமிருந்தால்), சரியான பிறந்த நேரம், தேதி, பிறந்த ஊர், அனைத்தையும் எழுதி, அதனுடன் உங்களுடைய ஜனன ஜாதக குறிப்பு இருந்தால் அதையும் இணைத்து என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு
E-mail: jothidam2011@gmail.com
அனுப்பி வைக்கவும். என்னால் முடிந்த வரை உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.
நீங்கள் என்னிடம் கொடுக்கும் தகவல்கள் உங்களுடைய உரிய அனுமதியில்லாமல் எவ்விடத்திலும் யாருக்கும் தெரிவிக்கப்பட மாட்டாது.
இது முழுக்க முழுக்க கட்டணமில்லாத ஒரு சேவை. இது என் மனநிறைவிற்காகவும் ஆத்மதிருப்திக்காகவும் ஒரு இறைப்பணியை போல் இன்று வரை செய்து வருகிறேன்.
இப்படிக்கு,
ஜோதிட ஆர்வலன்.