தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூலி தரும்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவ னடிசேரா தார்.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
ஜோதிட அறிவுத் துளி சிறிது பெற்றவன்.
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற ஒளவையின் வாக்கிற்கினங்க இந்த ஜோதிடம் என்ற கடலில் முழ்கி முத்தெடுக்க தான் முடியுமே அன்றி கடலை மொத்தமாக பருகி விடமுடியாது. அங்ஙனம் நானும் இந்த கடலில் முழ்கி சில முத்துக்களை தேடிக் கொண்டிருப்பவன் என்ற உரிமையில் தான் இந்த வலைப்பதிவை தொடங்குகிறேன். மேலும் பல முத்துக்களின் தேடலின் ஆர்வத்தில் தான் இந்த முயற்சி. அதுபோல ஜோதிடத்தில் உள்ள எல்லா அங்கங்களும் முனிவர்களாலும், சித்தர்களாலும் முன்பே வரையறுத்து சொல்லப்பட்டுவிட்டன. மொத்தம் 4,50,000 ஜோதிட ஸ்லோகங்கள் உள்ளன. அவைகள் பெரும்பாலும் மூல நூல்களாக உள்ளன. தற்போதுள்ள இந்த காலகட்டத்தில் இவை அனைத்தையுமே கற்று தெரிந்தவர் என்று உலகில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது இருப்பாரா என்பது சந்தேகமே. ஜோதிட சம்பந்தமான எல்லாக் கருத்துக்களும் முன்பே பதிவு செய்யப் பட்டுவிட்டன. அவற்றை முடிந்த அளவுக்கு தேடிக் வாசகர்களுக்கு கொடுக்கும் ஒரு முயற்சியேயாகும். இந்த வலைப்பதிவின் நோக்கமும் ஜோதிடக் கருத்துகளை திரட்டுவதும் தான். பலருக்கும் தெரிந்த கருத்துக்கள் மீண்டும் இடம் பெறவும் இதில் வாய்ப்புகள் உண்டு. இருந்தாலும் அவைகளும் பூக்களாய் வலையில் என்றும் மலர்ந்து கொண்டே இருக்கவே மீண்டும் பதியப் படலாம்.
ஏகலைவன் எப்படி துரோணாச்சாரியரை மனதாரா குருவாகக் கொண்டு வில்வித்தையை கற்றானோ அது போல நானும் என் மானசீகக் குருவாக "புலியூர் பாலு" அவர்களை குருவாகக் கொண்டே இந்த கலையை கற்க தொடங்கினேன். சிவபெருமானே நேரடியாக எனக்கு இந்த கலையைப் பயிற்று வித்ததாக எண்ணும் நான் இந்த வலைப் பதிவினை எல்லாம் வல்ல சிவபெருமானின் பொற்கமல பாதங்களில் சமர்பிக்கின்றேன். மேலும் என் குருவிற்கும் இது சமர்ப்பணமாக்குகிறேன்.