கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வியாழன், 14 ஏப்ரல், 2011

சூரியனை மேற்கில் உதிக்க சொல்லி ஆணை !


எல்லோருக்கும் இனிய "கர" வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




மலர போகிற அம்மா ஆட்சியில் நிச்சயம் சித்திரை முதல் நாளையே மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித்து அரசாணை வரும் என் மனம் ரொம்ப எதிர்பார்க்கிறது. இதை நான் சொல்றதால நான் 'அதிமுக' காரன் என்று யாரும் நினைக்க வேண்டாம். இந்த நடுநிலையாளர்கள் அப்படின்னு சொல்றாங்களே அதுல நானும் ஒருத்தன்பா...

தமிழ் புத்தாண்டை ஏன் 'சித்திரை முதல் தேதி' கொண்டாடுறாங்க என்பதற்கு வலையுலகில் நிறைய பேர் ஆராய்ச்சி கட்டுரையையே எழுதியிருக்காங்கன்னா பார்த்துங்க....

ஒவ்வொரு ராசியிலும் சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை தான் நம் முன்னோர்கள் இன்னும் எளிதாக்கி 'மாதங்கள்' எனப் பெயரிட்டு நடைமுறை வழக்கத்தில் கொண்டு வந்திருந்தனர். மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலம் முழுவதும் 'சித்திரை' மாதமாகும். அதே போல பன்னிரெண்டு ராசிகளில் சஞ்சரிப்பதையே 12 தமிழ் மாதங்களாக வகுத்திருந்தனர்.

இது எத்தனை ஆயிரம் ஆயிரமாண்டுகளா நடந்து கொண்டிருக்கின்றன. எனது பிரம்மாவின் வயது என்ற பதிவினை படித்தவர்களுக்கு நன்றாக புரியும். காலம் யாருக்காகவும் நிற்க போவதில்லை. யாரேனும் பூமியின் சுழற்சியை சற்று நேரம் நிறுத்தி வைக்க முடியுமா?

மேஷ ராசியில் பிரவேசிக்கும் முதல் நாளை தான் ஒரு ஆண்டின் துவக்கமாக நம் முன்னோர்கள் வகுத்து உள்ளனர். அதாவது ஒரு வட்டத்திற்கு 360 பாகை உள்ளது. இதில் 0 பாகையை தான் தொடக்க புள்ளியாக கொள்கிறோம். அதற்கு மாறாக நாம் யாரேனும் 270 வது பாகையை தொடக்கப் புள்ளியாக கொள்கிறாமா என்ன? அதை தான் பின்பற்ற சொல்லி அரசாணை இயற்றி நடைமுறையும் படுத்திவிட்டனர், அதாவது 270 பாகையை தொடக்கப் புளளியாக கொள்ளுங்கள் என்று ஆணை.

ஆமாங்க. 'தை மாதம்' என்பது 270 லிருந்து 300 பாகையில் சூரியன் இருக்கும் காலம். 'சித்திரை' என்பது 0 முதல் 30 பாகையாகும். இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் இப்படி மாற்றியமைப்பது சரி தானா என்று?

என்னுடைய நீண்ட நாள் சிறு ஆதங்கத்தையும் இப்ப பதிவு செய்திட்டேன். மனதிற்கு ஓரளவு நிம்மதியாய் இருக்கிறது.

கணக்கை திருத்தி எழுதி எழுதி ஊழல்ளை செய்ற பழக்க தோஷத்தில், இதிலும் திருத்தி எழுதிட்டாங்களோ என்னவோ?

ஆட்சியும் அதிகாரமும் இருந்துட்டா உண்மையிலேயே இவங்க சூரியனைக் கூட மேற்கில் உதிக்க சொல்லி அரசாணை இயற்றிடுவாங்கப்பா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.