கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

புதன், 2 மார்ச், 2011

மிருதங்க யோகம்

        

         தண்ணுமை என்பது தமிழிசைக் கருவியென்றால் உங்கள் எல்லோருக்கும் தெரியுமா? ஆனால் மிருதங்கம் என்றால் நம் எல்லோருக்கும் தெரியும்.ஆமாங்க தண்ணுமை என்றால் மிருதங்கம். இந்த மிருதங்க தாள வாத்தியம் இல்லாமல் ஒரு கர்நாடக இசைக் கச்சேரி சிறப்புறுவது இல்லை என்றே சொல்லலாம்.
        
          சரி என்னங்க இவரு எதைப் பற்றி சொல்ல வராரு தமிழ், கர்நாடக இசையென்று ஜோதிடத்திற்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பற்றியெல்லாம் பேசுகிறேனென்று தானே யோசிக்கிறீங்க. சரி விஷயத்திற்கு வருவோம்.

         அது என்னங்க மிருதங்க யோகம்? மிருதங்கம் வாங்கிற யோகமிருந்தா அது தான் மிருதங்கம் யோகமா? ரொம்ப எளிமையா இருக்கே. அப்படி இருந்தால் எனக்கும் சந்தோஷம் தான். ஆனால் நாம நினைக்கிற மாதிரி அது இல்லைங்க.

          நாம நிறைய யோகங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு சில அபூர்வ யோகங்களைப் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க மாட்டோம். அந்த வகையில் இந்த மிருதங்க யோகமும் ஒன்றாகும். ஏனெனில் இந்த யோகம் அபூர்வமாக ஒரு சிலருககு தான் அமையும்.

          ஜனன லக்கினத்திற்கு 11ஆம் வீட்டில் உச்சம் பெற்ற கோளோடு சுக்கிரனும் சேர்நது இருக்க அந்த வீட்டிற்கு அதிபதி 4, 7, 10 ஆகிய கேந்திரங்களிலோ அல்லது 9 மிடமாகிய மூல திரிகோணத்திலோ அமையப் பெற்றால் அது தான் மிருதங்க யோகம்.

இந்த மிருதங்க யோகமுடைய ஒரு ஜாதகன்
பலரையும் வெற்றிக் கொள்ளும் ஆற்றலுடையவன்.
மிகுந்த செல்வமுடையவன்.
சிறந்த ஞானியாவான்.
அரசருக்கெல்லாம் அதிபதியாய் விளங்க கூடியவன்.
மேற்சொன்ன பலன்கள் யாவும் அந்த ஜாதகரின் 48 வயதிற்கு மேல் மூன்று வருடங்கள் வரை இந்த யோகத்திற்கான பலனை அனுபவிப்பார்.

          இந்த யோகத்தோட பலனை படித்த உடனே இதை ஏன் அபூர்வ யோகம் என்று சொல்ல படுகிறதென்று புரிந்திருக்கும். ஏனெனில் வீரம், செல்வம், ஞானம், அரசாளும் யோகம் ஆகியன எல்லாம் ஒரு சேர அமையப் பெற்றிருக்கும் மனிதர்களை பார்ப்பதென்பது மிக அரிது. ஒருவருக்கு செல்வம் இருந்தால் வீரம் இருக்காது. வீரமிருந்தால் ஞானமிருக்காது. அதுபோல இவை அனைத்தையும ஒன்றாக பெற்ற மனிதர்களை பார்ப்பதென்பது மிகவும் அபூர்வம் தான். ஆகையால் தான் இந்த மிருதங்க யோகம் அபூர்வ வகை யோகமாகும்.

ஜோதிடப் பாடல்

வயது ஆறெட்டு மேல்மூன்று
              வருசம் மிருதங்க யோகபலன்
சுயலா பாதி யத்துச்சன்
              சுங்கன் கூடி யிருந்தமனை
நயவீட் டுடையோன் பத்தேழு
              நான்கி லொன்பான் அமர்திடவே
செயமாய் அரசர்க் கதிபதியாய்
              செப்பும் ஞானி தனவானே.


உங்களுடைய சுய ஜாதகத்தை எடுத்து சும்மா பாருங்க உங்களுக்கும் இந்த மிருதங்க யோகமிருக்கான்னு. அப்படி இருந்தால் நீங்களும் ஒரு அபூர்வ மனிதர் தாங்க.

பூக்கள் மலரும்.... 

2 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் பயன்படும் ? வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

ஜோதிடப் பூக்கள்! சொன்னது…

வருகைக்கு நன்றி! கருன்

கருத்துரையிடுக

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.ஜோதிட சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சும்மா கேளுங்க. என்னால் முடிந்த அளவில் உங்களுக்கு என்னுடைய பதில்களை அளிக்கிறேன்.