கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

வியாழன், 31 மார்ச், 2011

நான் கண்ட ஜோதிடர்கள்!!!




ஜோதிடத்தினை வாழ்க்கையில் எங்ஙனம் உபயோகிக்க வேண்டுமென்பதை அறிந்து கொள்வதற்காக தான் இந்த ­அனுபவப் பதிவு. பதிவின் நீளம் கருதி இதனை ஒரே பதிவா பதிய எனக்கு விருப்பமில்லை. இதனை தொடந்து இந்த தலைப்பிலேயே அவ்வப்போது எழுத விரும்புகிறேன்.
வாசகர்கள் கொஞ்சம் பொறுமையும் தொடர்ந்து படிக்கும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

2002ம் வருடம். அப்ப எனக்கு 22வயது. நான் வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்த காலம் அது. சரியான வேலையில்லை. சம்பளம் ரொம்ப கம்மி. என்னுடைய சம்பளம் என் ஒருவனுடைய சாப்பாட்டிற்கும், நான் தங்கியிருந்த இடத்திற்கு கொடுக்கிற வாடகைக்குமே சரியா இருக்கும். வேலையில் ஏற்பட்ட அடி என்னை மேலும் ரொம்ப பலவீனப் படுத்தியிருந்தது.

அப்ப எனக்குள்ள நாத்திக உணர்வு தலைதூக்கியிருந்த காலம். கடவுளெல்லாம் கும்பிடமாட்டேன். கோவிலுக்கு போனா கூட எல்லாரையும் உள்ள அனுப்பிவிட்டு நான் வெளியேவே உட்கார்ந்துக்குவேன். அந்த அளவுக்கு கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லாம இருந்த என்னுடைய வாழ்க்கையில் என்னை மீறி அடுத்தடுத்த நடந்த சம்பவங்கள் என்னை ரொம்பவே நிலைக்குலைய செய்திருந்தது.

என் வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமோ என்ற அச்ச உணர்வு வந்து என்னை பிடுங்கி தின்ன ஆரம்பித்தது. எந்த நல்ல விஷயமும் நடக்க மாட்டேங்துன்னு ஏங்கினேன். யாராவது எனக்கு நல்லது நடக்குமுன்னு சொல்லமாட்டாங்களான்னு ஏங்கி தவிச்சேன்.

சரி சரி என்னுடைய கஷ்டங்களை சொல்லி யாரையும் நான் சங்கடப் படுத்த விரும்பவில்லை.

என்னுடைய எதிர்காலம் என்னான்னு தெரிஞ்சிக்கிற ஆவலோட நான் தேடிச் சென்ற இடம் ஒரு ஜோதிடரின் வீடு தான். என்னுடைய ஜாதகத்தை அம்மாவிடமிருந்த வாங்கிக் கொண்டு அம்மாவையும் அழைத்துக் கொண்டு அவருக்கு தெரிந்த ஜோதிடரிடம் என்னை அழைத்துப் போகச் சொன்னேன். அது ஒரு ஓட்டு வீடு தான். அந்த வீட்டினுள் நுழைந்தவுடன் ரொம்ப பழமையான பொருட்கள் தான் என் கண்ணில் பட்டன. ஒரு கோரைப் பாயை விரித்துப் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்துக் கொண்டு அந்த ஜோதிடர் எங்களை வரவேற்று அமர சொன்னார். அவரு ரொம்ப பிரபலமான ஜோதிடரெல்லாம் கிடையாது. ஆனா அந்த பகுதிக்கே அவர் ஒருத்தர் தான் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டிருப்பவர்.

அவரிடம் நான் "எனக்கு யார் கீழேயும் வேலைக்கு செய்யப் பிடிக்கல. நான் ஏதாவது தொழில் பண்ணி பிழைச்சிக்க முடியுமா? அப்படி தொழில் பண்ணினா எந்த தொழில் செய்யறது?" என்று கேட்டேன்.

அவரு என்னுடைய ஜாதகத்தை பார்த்துவிட்டு நீ இப்ப தொழில் பண்ணலாம். பத்துல சூரியன் இருக்கு சமையல் சம்பந்தப்பட்ட உற்பத்தி மற்றும் தின்னு அழிக்கிற... அதாவது ஹோட்டல் தொழில் பண்ணுப்பா.... நீ டாப்பா.....வருவேன்னு சொன்னாரு.  சரிங்க அய்யான்னு சொல்லிட்டு எழுந்து வந்திட்டேன். ஆனா வழக்கம் போல எல்லா அம்மாக்களும் தன் புள்ளைங்க ஜாதகத்தை காட்டி கேட்கிற அந்த கேள்வியை "என் பையன் கல்யாணம் எப்ப நடக்கும்" என்கிற கேள்வியை என் அம்மாவும் கேட்க அவரும் ஏதோ ஒரு பதிலைச் சொல்லி அனுப்பி வைச்சாரு.

அந்த வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் எனக்கு அவரு சொன்ன பதில்ல கொஞ்சம் கூட திருப்தியில்லை. நான் என் அம்மாவிடம் கேட்டேன். "இவரைப் பார்த்தால் எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை வரல. இந்த ஆளுக்கு எவ்வளவு ரூபாய் தட்சணையா கொடுத்தே?" போயும் போயும் ஒரு ஒன்றையணா ஜோசியர்கிட்டே போய் என்னை அழைச்சிக்கிட்டு வந்திருக்கியேயம்மா என்றேன்.

சரி அடுத்து யார் பெரிய ஜோசியர் இருக்கா? சொல்லு... அவரு வீட்டிற்கு போகலாமென்றேன் நான்.

வியாழன், 24 மார்ச், 2011

ஆட்சி யாருக்கு?

தேர்தல் ஜூரம் எனக்கும் வந்து விட்டது. எல்லா இடத்திலேயும் அரசியலைப் பற்றி தான் பேச்சாக இருக்கு.
நமக்கு தெரிநத அரசியலை நாமும் பேசமா விட்டா எப்பூடிடி...? அதான் இந்த அரசியல் பதிவு.

ஆனா ஒரே ஒரு நிபந்தனை. அது என்னான்ன இங்கே தி.மு.க , அ.தி.மு.க, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. என்று எந்த கழகத்தைப் பற்றியோ, அவங்களோட கூட்டணி பற்றியோ பேச மாட்டேன். (அப்ப வேற எதப்பத்தி பேசபோறாரும் இவரு....? கழகங்களைப் பற்றியும் கூட்டணி பற்றியும் பேசலைன்னா தமிழக அரசியலைப் பற்றி பேச லாயக்கே இல்லை!)


"கழக அரசியல் புரிபவர்களும்
கிரக அரசியல் பார்த்து தான்

மஞ்சள் துண்டினை அணிந்து கொண்டும்
பச்சை நிறத்தினை உபபோகித்து கொண்டும்

தேய்பிறை பஞ்சமி திதி அனுஷ நட்சத்திரம்
சுப முகூர்த்த தினம் என எல்லாம் கூடி வரும் 
நல்ல நாளாம் இன்று எங்களை அனுசரித்து 
வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்

பிஸ்கட்டுக்கு நன்றி காட்டுவது போல
இலவசத்திற்கு நன்றி காட்டும் மக்களை 
இவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ
ஆனால் நிச்சயம் எங்களை நம்புகிறார்கள்

ஆட்சி அமைந்த பின் நல்லது செய்ய தயங்கும் இவர்கள்
ஊழல் செய்ய மட்டும் தயங்குவதே இல்லை........"

எல்லாருமே இந்த நல்ல நாளிலே வேட்பு மனு தாக்கல் செய்தாலும் 
எல்லாருக்கும் வெற்றி கிடைத்திடுமா என்ன? 

வெற்றி யாருக்கு?..............ஆட்சி யாருக்கு.........?
எங்க அரசியல் உங்களுக்கு புரியவே புரியாதுங்கோ........
எங்க பலம் உங்களுக்கு எப்புடி தெரியும்.......?

கருத்து கணிப்பு செய்ய கூடாதுன்னு 
தேர்தல் ஆணையம் வேணும்னா தடை செய்யலாம்

ஆனால் எங்களை தடை செய்ய முடியாது
அட நாங்க யாரா.......?
நாங்க தாங்க நவக்கிரகங்கள்."


எனக்கு எந்த கழகத்தோட அரசியலும் தெரியாதுங்க. எனக்கு தெரிந்ததெல்லாம் கிரகங்களோட அரசியல் தான். நம்ம அதைப் பற்றி இப்ப பார்ப்போம்.

கிரகங்களோட தொகுதி பங்கீடு, கூட்டணி பற்றி பார்க்கலாம். 
அட அதாங்க...கிரகங்களோட உச்ச, நீச்ச, ஆட்சி, நட்பு மற்றும் பகை வீடுகளைப் பற்றி பார்ப்போம். எந்தெந்த கிரகங்க்ள எந்தெந்த ராசிகளிலிருந்தால் இவை உச்சம், நீச்சம், ஆட்சி, நட்பு, பகை பெறுகின்றன என்பதை எளிதாக தெரிந்து கொள்வதற்காக ஜாதக கட்டங்களிலேயே அவற்றை பொருத்தி எளிய அட்டவணை ஒன்றையும் கொடுத்துள்ளேன். இந்த வலைப் பதிவிற்கு வருகை தருபவர்களுக்கு உபயோகமாக இது இருக்கட்டுமே என்று தான்...


கோள்களின் உச்சம் 



கோள்களின் நீச்சம்


கோள்களின் ஆட்சி வீடுகள்



கோள்களின் நட்பு வீடுகள்



கோள்களின் பகை வீடுகள்

கோள்களின் உச்ச, நீச்ச, ஆத்சி, நட்பு, பகை வீடுகள் எளிய அட்டவணை


 உங்க உரிமை ஓட்டு போடுங்க.... கழகத்திற்கு மட்டுமல்ல கிரகத்தைப் பற்றி எழுதற எனக்கும் தாங்க.....

திங்கள், 14 மார்ச், 2011

நண்பேன்டா...வில்லேன்டா...சமம்டா...!


நண்பேன்டா...



கிரகங்களில் யார் யார் ஆர்யா, சந்தானம் மாதிரி நண்பர்கள் என்று பார்க்கலாம். "பாஸ் என்கிற பாஸ்கரனில்" எப்படி ஆர்யா, சந்தானம் நண்பர்கள் கூட்டணி ஒரு சலிப்பும் தட்டாமல் அந்த படம் முழுவதும் நமக்கு ஒரு சந்தோஷமான நகைச்சுவை உணர்வை வாரி வழங்கியதோ அது போலத் தான் கிரகங்களில் நட்பு கூட்டணி ரொம்ப முக்கியமாகும். நட்பு கிரகங்கள் ஒன்றாக ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருப்பது என்பது ஒரு யோகமான அமைப்பே ஆகும். உதாரணமாக சூரியனுக்கு குரு, செவ்வாய், சந்திரன் இந்த மூன்றும் நட்பு கிரகங்கள். இவற்றில் சூரியன் யாருடன் கூடினாலும் மிக நட்பாக இருக்கும். அதுபோல மற்ற கிரகங்களுக்கான நட்பு உறவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிரகங்களின் நட்பு

சூரியன் - குரு, செவ்வாய், சந்திரன்

சந்திரன் - சூரியன், புதன்

செவ்வாய் - குரு, சூரியன், சந்திரன்

புதன் - சுக்கிரன், சூரியன், ராகு, கேது

குரு - சூரியன், செவ்வாய், சந்திரன்

சுக்கிரன் - புதன், சனி, ராகு, கேது

சனி - சுக்கிரன், புதன், ராகு, கேது


வில்லேன்டா...



கிரகங்களில் யார் யார் நம்பியார், எம்.ஜி.ஆர் மாதிரி எதிரிகள் என்று பார்க்கலாம். நம்பியாரும் எம்.ஜி.ஆரும் படங்களில் எந்த அளவிற்கு மோதிக் கொள்வார்கள் என்று எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்த நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோலத் தான் பகைமை கொண்ட கிரகங்கள் ஒன்றாக கூடி ஒரே வீட்டில் இருந்தால் எந்த அளவிற்கு அந்த கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு கெட்டப் பலன்களைச் செய்யும் என்பதை சற்றே யூகித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக சூரியனுக்கு பகை என்று பார்த்தால் அது சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவை ஆகும். சூரியன் இவற்றுடன் சேரும்போது கெடுபலன்களை செய்வதற்கு நம்பியார் போல் செயல்படும். எந்தெந்த கிரகங்கள் பகை உறவு கொண்டுள்ளன என்பது பின்வருமாறு.

கிரகங்களின் பகை


சூரியன் - சுக்கிரன், சனி, ராகு, கேது

சந்திரன் - ராகு, கேது

செவ்வாய் -  புதன்

புதன் - சந்திரன்

குரு - சுக்கிரன், புதன், ராகு, கேது

சுக்கிரன் - சூரியன், சந்திரன்

சனி - செவ்வாய், சூரியன், சந்திரன்


சமம்டா...



கிரகங்களில் யார் யார் ரஜினி, கமல் மாதிரி சமமானவர்கள் என்று பார்க்கலாம். ரஜினியோட படங்கள் எந்த அளவிற்கு பிரபலமோ அதற்கு நிகராக கமலின் படங்களும் பிரபலம் தான். அதாவது இருவருக்கும் உள்ள ஆற்றல்கள், திறமைகள் வெவ்வேறாக இருந்தாலும், இருவருமே அவரவருடைய தனிப்பட்ட வழிகளில் சரி சமமானவர்களே. அந்த வகையில் வெவ்வேறு ஆற்றல்களைப் பெற்ற கிரகங்கள் எப்படி சம பலத்தினைப் பெறுகின்றன என்பது கீழே தரப்பட்டுள்ளது. உதாரணமாக சூரியனுக்கு புதன் நிகரானவன் ஆவான்.

கிரகங்களின் சமம்


சூரியன் - புதன்

சந்திரன் - குரு, சுக்கிரன், செவ்வாய், சனி

செவ்வாய் - சனி, சுக்கிரன், ராகு, கேது

புதன் - குரு, செவ்வாய், சனி

குரு - சனி

சுக்கிரன் - குரு, செவ்வாய்

சனி - குரு

ஜோதிடம் கற்றவர்களும், ஜோதிடம் கற்பவர்களும் முக்கியமாக தெரிஞ்சிருக்க வேண்டியது இந்த கிரகங்களுககான நட்பு, பகை, சமம் உறவு முறையாகும். இது மிக முக்கியமான அடிப்படையான விஷயமாகும். ஆனால் இந்த உறவு முறைகளில் கூட சில ஜோதிடர்கள் தவறாக சொல்வதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். சரி எல்லோருக்கும் உபயோகமாக இருக்கட்டுமே என்று தோனிற்று. அதனால் தான் இந்த பதிவு.

பதிவு பிடிச்சிருந்தா வோட்டு போட்டு உங்க உரிமையையும், கருத்து சொல்லி உங்க உணர்வையும் வெளிப்படுத்துங்க.


அடுத்தது..... கிரகங்களின் நட்பு வீடுகள்...

புதன், 2 மார்ச், 2011

மிருதங்க யோகம்

        

         தண்ணுமை என்பது தமிழிசைக் கருவியென்றால் உங்கள் எல்லோருக்கும் தெரியுமா? ஆனால் மிருதங்கம் என்றால் நம் எல்லோருக்கும் தெரியும்.ஆமாங்க தண்ணுமை என்றால் மிருதங்கம். இந்த மிருதங்க தாள வாத்தியம் இல்லாமல் ஒரு கர்நாடக இசைக் கச்சேரி சிறப்புறுவது இல்லை என்றே சொல்லலாம்.
        
          சரி என்னங்க இவரு எதைப் பற்றி சொல்ல வராரு தமிழ், கர்நாடக இசையென்று ஜோதிடத்திற்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பற்றியெல்லாம் பேசுகிறேனென்று தானே யோசிக்கிறீங்க. சரி விஷயத்திற்கு வருவோம்.

         அது என்னங்க மிருதங்க யோகம்? மிருதங்கம் வாங்கிற யோகமிருந்தா அது தான் மிருதங்கம் யோகமா? ரொம்ப எளிமையா இருக்கே. அப்படி இருந்தால் எனக்கும் சந்தோஷம் தான். ஆனால் நாம நினைக்கிற மாதிரி அது இல்லைங்க.

          நாம நிறைய யோகங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு சில அபூர்வ யோகங்களைப் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க மாட்டோம். அந்த வகையில் இந்த மிருதங்க யோகமும் ஒன்றாகும். ஏனெனில் இந்த யோகம் அபூர்வமாக ஒரு சிலருககு தான் அமையும்.

          ஜனன லக்கினத்திற்கு 11ஆம் வீட்டில் உச்சம் பெற்ற கோளோடு சுக்கிரனும் சேர்நது இருக்க அந்த வீட்டிற்கு அதிபதி 4, 7, 10 ஆகிய கேந்திரங்களிலோ அல்லது 9 மிடமாகிய மூல திரிகோணத்திலோ அமையப் பெற்றால் அது தான் மிருதங்க யோகம்.

இந்த மிருதங்க யோகமுடைய ஒரு ஜாதகன்
பலரையும் வெற்றிக் கொள்ளும் ஆற்றலுடையவன்.
மிகுந்த செல்வமுடையவன்.
சிறந்த ஞானியாவான்.
அரசருக்கெல்லாம் அதிபதியாய் விளங்க கூடியவன்.
மேற்சொன்ன பலன்கள் யாவும் அந்த ஜாதகரின் 48 வயதிற்கு மேல் மூன்று வருடங்கள் வரை இந்த யோகத்திற்கான பலனை அனுபவிப்பார்.

          இந்த யோகத்தோட பலனை படித்த உடனே இதை ஏன் அபூர்வ யோகம் என்று சொல்ல படுகிறதென்று புரிந்திருக்கும். ஏனெனில் வீரம், செல்வம், ஞானம், அரசாளும் யோகம் ஆகியன எல்லாம் ஒரு சேர அமையப் பெற்றிருக்கும் மனிதர்களை பார்ப்பதென்பது மிக அரிது. ஒருவருக்கு செல்வம் இருந்தால் வீரம் இருக்காது. வீரமிருந்தால் ஞானமிருக்காது. அதுபோல இவை அனைத்தையும ஒன்றாக பெற்ற மனிதர்களை பார்ப்பதென்பது மிகவும் அபூர்வம் தான். ஆகையால் தான் இந்த மிருதங்க யோகம் அபூர்வ வகை யோகமாகும்.

ஜோதிடப் பாடல்

வயது ஆறெட்டு மேல்மூன்று
              வருசம் மிருதங்க யோகபலன்
சுயலா பாதி யத்துச்சன்
              சுங்கன் கூடி யிருந்தமனை
நயவீட் டுடையோன் பத்தேழு
              நான்கி லொன்பான் அமர்திடவே
செயமாய் அரசர்க் கதிபதியாய்
              செப்பும் ஞானி தனவானே.


உங்களுடைய சுய ஜாதகத்தை எடுத்து சும்மா பாருங்க உங்களுக்கும் இந்த மிருதங்க யோகமிருக்கான்னு. அப்படி இருந்தால் நீங்களும் ஒரு அபூர்வ மனிதர் தாங்க.

பூக்கள் மலரும்....